• Dec 27 2024

தயவுசெய்து என்னை நடிக்க கூப்பிடாதீங்க... பிரபல இயக்குனருக்கு கங்கனா ரனாவத் வேண்டுகோள்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘அனிமல்’ பட இயக்குநர் சந்தீப் ரெட்டியிடம் ’என்னை உங்கள் படத்தில் நடிக்க அழைக்காதீர்கள், அப்படி அழைத்தீர்கள் என்றால், உங்கள் படம் ஒரு பெண்ணியவாதி படமாக மாறிவிடும்’ என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவான ‘அனிமல்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த படம் ரூ.900 கோடிக்கும் மேல் வசூல் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும்  இந்த படத்தை பலர் கடுமையாக விமர்சித்தனர். முழுக்க முழுக்க ஆணாதிக்கம் உள்ள படமாக இந்த படம் இருப்பதாகவும் ரொம்ப கேவலமான படம் என்றும் திரையுலகினர் விமர்சனம் செய்தனர். தமிழ்  நடிகை ராதிகாவும் இந்த படத்தை தனது சமூக வலைதளத்தில் கடும் விமர்சனம் செய்தார் என்பதை தெரிந்தது.



இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் சந்தீப் ரெட்டி பேட்டி அளித்த போது ‘அனிமல்’ படத்தை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சனம் செய்தாலும் அவருக்கான கேரக்டர் இருக்கும் போது அவரை கண்டிப்பாக எனது படத்தில் நடிக்க அழைப்பு விடுப்பேன் என்றும் அவர் மிகவும் திறமையான நடிகர் என்றும் ’குயின்’ போன்ற படங்களில் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த கங்கனா ரனாவத், ’சந்தீப் ரெட்டி படத்தில் நடிப்பது எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, ஆனால் அதே நேரத்தில் என்னை அவரது படத்தில் நடிக்க அழைத்தால், அவரையும் அவரது ஆணாதிக்க கேரக்டர்களையும்  நான் பெண்ணியவாதியாக மாற்றி விடுவேன், எனவே நீங்கள் தொடர்ந்து வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்றால் என்னை உங்கள் படத்திற்கு நடிக்க அழைக்க வேண்டாம்’ என்றும் தெரிவித்துள்ளார். கங்கனாவின் இந்த அதிரடி பதில் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement