• Apr 16 2026

’கங்குவா’ எனக்கு ஸ்பெஷலான படம்! நடிகர் சூர்யா வெளியிட்ட சூப்பர் அப்டேட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், பாலிவுட்டில் நடிகை திஷா பதானி, மிருணால் தாக்கூர், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இத்திரைப்படம் தமிழ் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளதால் அனைத்து மொழிக்கும் பொருத்தமான ஒரு பெயரை தேர்ந்து எடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், ‘கங்குவா’ படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததாக சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,  ‘கங்குவா’ படத்தில் எனது கடைசி காட்சி எடுத்து முடிக்கப்பட்டது. ஒட்டுமொத்த யூனிட்டும் நேர்மறை எண்ணங்களால் நிறைந்திருந்தது. இது ஒன்றுக்கான முடிவு மற்றும் பலவற்றுக்கான தொடக்கமாக இருக்கிறது. இந்த நினைவுகள் அனைத்தையும் தந்த அன்புக்குரிய சிவா மற்றும் குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ’கங்குவா’ எனக்கு மிகப்பெரிய மற்றும் ஸ்பெஷலான படம். அதை நீங்கள் திரையில் காணவேண்டும் என்று நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.


 

Advertisement

Advertisement