• Apr 23 2026

காதல், கவியின் சுட்டித்தனங்களை பார்த்து ரசிக்கும் கன்னிகா..!செம க்யூட்டான வீடியோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன், நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்தார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இல்லற வாழ்க்கையை தனியாக சந்தோஷமாக அனுபவித்த இந்த தம்பதியினர் கடந்த ஆண்டு இரட்டை குழந்தைக்கு பெற்றோர் ஆனனர்.

சினேகன் தம்பதியினருக்கு பிறந்த குழந்தைகளுக்கு “காதல்” மற்றும் “கவிதை” என்ற பெயரை புகழ்பெற்ற நடிகர் கமல் ஹாசன் வைத்தார். அதன் பின்பு தன்னுடைய குழந்தைகள் செய்யும் சுட்டித் தனத்தையும் கன்னிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில், சினேகன் படித்த பாடசாலையில் அவர்கள் பாடசாலை மாணவர்கள் போல ஆடை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் செம வைரலானது. அதில் ஆசிரியராக சினேகனும்  கன்னிகா, குழந்தைகள் பள்ளி ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் செமக் க்யூட்டாக காணப்பட்டன.


இதை தொடர்ந்து பொது வழியில் செல்லும்போது குழந்தைகள் ஒரே நேரத்தில் ஆடை அணிந்து சென்ற காட்சிகளும் இணையத்தில் வைரலாகின. 

இந்த நிலையில், நடிகை கன்னிகா தனது குழந்தைகள் செய்யும் சுட்டித் தனத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இதை பார்த்த ரசிகர்கள் கன்னிகாவின் குழந்தைகள் எவ்வளவு க்யூட்டா இருக்காங்க., செம வாலு..,  என தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement