• Dec 25 2024

கப்பு முக்கியம் பிகிலு- அரசியலுக்கு வருவதை வெளிப்படையாக அறிவித்த நடிகர் விஜய்

stella / 1 year ago

Advertisement

Listen News!


மாஸ்டரை தொடர்ந்து விஜய் - லோகேஷ் கூட்டணியில் இரண்டாவதாக உருவான திரைப்படம் லியோ. இந்தாண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் லியோ தான் டாப்பில் இருந்தது. அதன்படி, கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸான லியோ, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பேசிய விஜய் வழக்கம் போல தனது ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி சொல்லி வைப் கொடுத்தார்.


விஜய் தான் சந்தித்த சர்ச்சைகளுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். சினிமாவை சினிமாக மட்டும் பாருங்க என்றும் அவர் கேட்டிருக்கிறார்.


026 தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவாரா என்கிற எதிர்ப்பார்ப்பு இருக்கும் நிலையில் அதை பற்றி லியோ வெற்றி விழாவில் கேட்கப்பட்டு இருக்கிறது.அதற்கு அவர் 'கப்பு முக்கியம் பிகிலு' என கூறி இருக்கிறார். அதனால் அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்றே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். 

Advertisement

Advertisement