• Dec 25 2024

சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர்தான்,தளபதி என்றால் யாரென்று தெரியும்- நீண்ட நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

stella / 1 year ago

Advertisement

Listen News!


லியோ ஆடியோ லான்ச்சில் மிஸ்ஸான நடிகர் விஜய்யின் பேச்சு லியோ வெற்றிவிழாவில் கேடடு ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.அனைத்து விஷயங்களையும் அழகாகவும் தெளிவாகவும் எந்தவொரு சர்ச்சையை கிளப்பாத வகையிலும் பேசிய நடிகர் விஜய் கடைசியில் அந்த பட்டம் தொடர்பான பஞ்சாயத்துக்கும் முடிவு கட்டி உள்ளார்.

அதாவது புரட்சி தலைவர்-னா ஒருத்தர் தான். புரட்சி கலைஞர் என்றால் ஒருத்தர் தான். நடிகர் திலகம்-னா ஒருத்தர் தான். உலகநாயகன் என்றால் ஒருத்தர் தான், சூப்பர்ஸ்டார் என்றால் ஒருத்தர் தான். தல என்றால் ஒருத்தர் தான்."


"நீங்கள் தான் மன்னர்கள் நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்.. என தனது அரசியல் நிலைப்பாட்டையும் அதிரடியாக அறிவித்துள்ளார்.


மேலும் அனைவருக்கும் சமமான கல்வி உரிமை கிடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். விஜய்யின் இந்தப் பேச்சு வைரலாகி வருவதோடு சூப்பர் ஸ்டார் பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ், நெல்சன் மற்றும் அட்லீ உள்ளிட்ட இயக்குநர்கள் மூவரும் வெவ்வேறு வகையிலான கதைகளை மக்களுக்கு கொண்டு வந்து தந்துள்ளனர். அவர்களின் அண்ணனாக இருப்பதில் எனக்குத் தான் பெருமை என்றும் பேசியுள்ளார்.




Advertisement

Advertisement