• Dec 27 2024

மெய்யழகன் படத்தில் வளவளவென பேசும் கார்த்தி.. அதிரடியாக நீக்கப்பட்ட நிமிட காட்சிகள்..

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தியின் 27வது திரைப்படமாக வெளியான திரைப்படம் தான் மெய்யழகன். இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கடந்த 27ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று கோடிகளை குவித்து வருகின்றது.

மெய்யழகன் திரைப்படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கிருந்தார். இந்த படத்தை சுமார் ஆறு வருடங்கள் கழித்து இயக்கியுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு எழுந்த எதிர்பார்ப்பை மெய்யழகன் சிறப்பாகவே பூர்த்தி செய்துள்ளது. மேலும் குடும்ப உறவுகளின் மகத்துவத்தை பேசுவதாக இந்த படம் அமைந்துள்ளது.

எனினும் இந்த திரைப்படத்தின் நீளம் ஏறக்குறைய மூன்று மணி நேரங்களாக காணப்பட்டது. இடைவேளைக்குப் பிறகு கார்த்தி வளவளவென பேசிக் கொண்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.


இந்த நிலையில், மெய்யழகன் படத்தில்  ஒரு சில அதிரடி முடிவுகளை எடுத்து மாற்றம் செய்துள்ளார்கள் படக் குழுவினர். அதாவது இந்த படத்தின் நீளத்தை 18 நிமிடங்களாக குறைத்து உள்ளார்கள். இதனை இயக்குனர் பிரேம்குமார் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று முதல் மெய்யழகன் படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு இரண்டு மணி நேரம் 38 நிமிடங்களாக படத்தின் திரையிடல் தொடரும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மெய்யழகன் படத்தின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டதாகவும் அவன் பேசும் அன்பும் திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை என அவர் தெளிவு படுத்தி உள்ளார்.

Advertisement

Advertisement