• Dec 25 2024

விரைவில் திரைக்கு வரும் பையா 2... என்னது படத்துல கார்த்திக் இல்லையா... இவருக்கு பதில் இவரா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 2010ம் ஆண்டு கார்த்தி-தமன்னா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் பையா. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து தற்போது அதன் பாகம் 2 தயாரிக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது. 


பையா திரைப்படம் நடிகர் கார்த்திக்கின் எதார்த்தமான நடிப்பில் தன்னை கவர்ந்த பெண் ஒரு இக்கட்டில் சிக்க, அவரை காப்பாற்றுவதற்காக ஹீரோ களமிறங்கும்  தையாகவே இது இருந்தது. காரிலேயே பயணம் செய்யும் நாயகன் - நாயகி இடையில் விறுவிறுப்பான காட்சிகள் என சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.


இந்த படத்தின் 2ம் பாகம் எப்போதும் வரும் என ரசிகர்கள் எப்போதோ கேள்வி எழுப்பிவிட்டனர், ஆனால் இயக்குனர் தரப்பில் சரியான தகவல் வந்ததில்லை. இந்த நிலையில் பையா 2 படம் குறித்து ஒரு சூப்பரான செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.


அதாவது நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்க பையா 2 தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படம் முந்தைய படத்தின் தாக்கத்தில் உருவாகுமா அல்லது முற்றிலும் புதிய கதைக்களத்தில் உருவாகுமா என்பது தெரியவில்லை.


அதற்கான அப்டேட் நியூஸ் கூடிய சீக்கிரம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Advertisement

Advertisement