• Dec 26 2024

என்னுடைய மனைவி Boycut-ஸ்டைலில் தலைமுடி வெட்ட நான் தான் காரணம்- உண்மையை உடைத்த கருணாஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


கருணாஸ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், பாடகர், அரசியல் பிரமுகர் என பல வகையில் பிரபலமாக இருக்கிறார். அதுபோல கருணாஸின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை எனும் கிராமம்தானாம். 

ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக பிரபலமாகினார். இவர்  2001ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பிறகு தான் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.


இவர் பிரபல பின்னணி பாடகி கிரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது,


எனது மனைவி கிரேஸ் பாப் கட்டிங் லுக்கில் எப்போதும் இருப்பதற்கு காரணமே நான் தான். திருமணத்திற்கு முன்னர் அவளுக்கு நீளமான முடி இருந்தது, ஆனால் நான் தான் வெட்டிவிட்டு விட்டேன்.Boycut பண்ணால் தான் பெண்களுக்கு ஒரு தைரியமும், தன்னம்பிக்கையும் வரும். அதனால் தான் நான் அவரது தலை முடியை வெட்டி விட்டேன் என கூறியுள்ளார்

Advertisement

Advertisement