• Dec 26 2024

அட்ரா சக்க... !! ப்ரீ புக்கிங்கில் கல்லா கட்டும் கவினின் படம்! எத்தனை லட்சம் தெரியுமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய நடிகராக காணப்படுபவர் தான் கவின்.

இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றி இன்னும் பிரபலமானார். 

வெள்ளித் திரையில் கால் பதித்த கவின், லிப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். டாடா திரைப்படம் இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக காணப்பட்டது.

தற்போது கவின் இளன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் லால்,அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன்ஆகியோர் நடிக்கின்றார்கள்.


இந்த நிலையில், தற்போது கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஸ்டார் திரைப்படம் உலக அளவில் மட்டும் இதுவரை 80 லட்சத்திற்கு மேல் வசூலித்துள்ளதாம்.

இதன் மூலம் கவினின் ஸ்டார் திரைப்படத்திற்கு மாபெரும் ஓப்பனிங் கிடைத்துள்ளது. எனவே கவின் படம் முதல் நாளில் எவ்வளவு வசூலை வாரிக் குவிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement