• Dec 25 2024

திருமணம் நெருங்கும் நேரத்தில் காதலனுடன் கீர்த்தி போட்ட போஸ்ட்! வைரல்....!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அவரை ரசிக்கவைத்ததோடு அவரின் நடிப்பை வியந்து பார்க்கவைத்துள்ளது. இந்நிலையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தற்போது தனது திருமணம் குறித்து அவரே ஓபனாக கூறியுள்ளார். 


தனது நீண்டகால நண்பனான ஆண்டனி தட்டில் என்பவரை இந்த டிசம்பரில் திருமணம் செய்ய உள்ளார். இந்த ஜோடி, 15 ஆண்டுகளாக நிலையான உறவில் இருப்பதாக கூறப்படுகிறது, கோவாவில் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மற்றும் கேரளாவில் பாரம்பரிய திருமண விழா  என்பன செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில் தற்போது கீர்த்தி தனது இன்ஸராகிறேம் பக்கத்தில்  நானும் ஆண்டனி தட்டிலும் 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாக சமூக வலைதளத்தில் தெரிவித்து ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.. 

Advertisement

Advertisement