• Jan 24 2025

என்னால் கணவருக்கு மிகவும் சங்கடம்..! திருமண உறவு குறித்து open ஆக பேசிய கீர்த்தி சுரேஷ்..

Mathumitha / 6 hours ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி சுரேஷ் அண்மையில் ஆண்டனி தட்டில் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.திருமணம் முடிந்த கையுடன் மஞ்சள் தாலியுடன் "பேபி ஜான்" திரைப்பட ப்ரோமோஷனுக்கு சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.


தற்போது கீர்த்தி சுரேஷ் நேர்காணல் ஒன்றின் போது " என்னை திருமணம் செய்து கொண்டது தான் ஆண்டனிக்கு சங்கடமாக உள்ளது " என கூறியது வைரலாகியுள்ளது.மற்றும் தனது கணவரின் பல பெருந்தன்மையான செயல்பாடுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.


திருமணத்தின் பின்னர் வாழ்க்கை எப்புடி இருக்கிறது என்ற கேள்விக்கு " திருமணத்தின் பின்னர் வாழ்க்கை மாறியதாக தெரியவில்லை எல்லாம் அப்புடியே தான் இருக்ககிறது; எங்கே சென்றாலும் புகைப்படம் எடுக்கிறார்கள்.நிறைய attention கிடைக்கிறது அது மட்டுமன்றி இது எனக்கு பழகி விட்டது; என் கணவருக்கு பழக்கமில்லை அதனால் அவருக்கு சங்கடமாக இருக்கிறது.ஆனாலும் எந்த புகாரும் சொல்வதில்லை எனக்காக எல்லாவற்றையும் ஏற்று கொள்கிறார்.எனது கணவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை private ஆக தான் வைத்திருக்கிறார்.தனது புகைப்படங்களை வெளியிடுவதில் அவருக்கு விருப்பமில்லை எனக்காக போஸ்ட் கொடுக்கிறார்.மீடியா முன்பு வர கூச்சப்பட்டாலும் எனது காரியருக்கு அது மிகவும் முக்கியம் என புரிந்து நடக்கிறார்." என open ஆக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement