• Dec 26 2024

பிறந்தநாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்! எத்தனை கோடிக்கு சொந்தக்காரர் தெரியுமா?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சிறந்த நடிப்பினால் பல படங்களை கொடுத்துள்ளார். கைவசம் தற்போது ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி ஆகிய படங்களை வைத்துள்ளார். முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷின் 32வது பிறந்தநாள் இன்று.


கீர்த்தி சுரேஷின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 45 கோடி வரை இருக்குமாம். இவர் ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டின் மதிப்பு ரூ. 6 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.


Brand-new Volvo S90 - ரூ. 60 லட்சம், BMW 7 Series 730Ld - ரூ. 1.38 கோடி, Mercedes Benz AMG GLC43 - ரூ. 81 லட்சம், Toyota Innova Crysta - ரூ. 25 லட்சம் ஆகிய கார்களை நடிகை கீர்த்தி சுரேஷ் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் கீர்த்திக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 



Advertisement

Advertisement