• Apr 04 2025

"மூக்குத்தி அம்மன் 2" ஷுட்டிங்கில் நயன்தாரா சர்ச்சை..! உண்மையை கூறிய குஷ்பூ...

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியாகிய "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் OTT யில் வெளியாகி பரபரப்பாக வரவேற்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து ஊர்வசி, மௌலி, ஸ்மிருதி வெங்கட், அஜய் ஜோஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


இந்த வெற்றியின் பின்பு கடந்த ஆண்டின் இறுதியில் "மூக்குத்தி அம்மன் 2" படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் இப் படத்தின் பூஜை நிகழ்வு பல சினிமா பிரபலங்களுடன் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கியது. ஆனால் படப்பிடிப்பின் ஆரம்பத்தில் நயன்தாரா மற்றும் உதவி இயக்குநர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக இணையத்தில் பல வதந்திகள் பரவி வந்தன.


இதனிடையே நடிகை குஷ்பு தற்போது சமூக ஊடகங்களில் ஒரு பதிலை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில் "மூக்குத்தி அம்மன் 2 பற்றிய பல தேவையற்ற வதந்திகள் பரவி வருகின்றன. இது அனைத்தும் பொய்யான தகவல்கள். படப்பிடிப்பு திட்டமிட்டபடி நன்றாக நடைபெற்று வருகிறது. எல்லாம் நன்மைக்கே தான் நடக்கிறது. எங்களிடம் உங்கள் ஆசீர்வாதம் மற்றும் அன்பே முக்கியம். எப்போதும் எங்களுடன் இருக்கின்ற நீங்கள் அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement