பிரபல நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியாக இருக்கும் "கேம் சேஞ்சர்" திரைப்படத்தின் நான்காவது பாடல் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நடிகை கியாரா அத்வானி அந்த பாடலுக்கு டான்ஸ் பிரக்டிஸ் செய்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி முக்கிய வேடங்களில் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தினை பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார். இத்திரைப்படம் இவரின் முதல் தெலுங்கு திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் நான்காவது பாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் கியாரா அத்வானி ஆடிய இன்னுமொரு வீடியோ இணையத்தை தன்வசப்படுத்தியுள்ளது.
கேம் சேஞ்சர் திரைப்படத்தின் 4வது பாடலாக வெளியாகி இருக்கும் ஹிப் ஹாப் பாடலுக்கு நடிகை கியாரா அத்வானி பிரக்டிஸ் பண்ணிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அவ்வளவு கச்சிதமாக பாடலுக்கு ஏற்றால் போல இடையை வளைத்து இவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை கட்டி இழுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி படு வைரலாக இந்த வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ
Listen News!