• Dec 25 2024

Kid Gloves _ டன் புதிய ஸ்கிரிப்டை ரெடி பண்ணும் ஆண்டவர்.! பக்கா மாஸ் அப்டேட்

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் மணிரத்தினம் இயக்கும் தக் லைஃப் படத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடித்து வருகின்றார். இந்த படத்தில் சிம்புவும் இணைந்துள்ளார். தக் லைஃப் படத்தை தொடர்ந்து சண்டை பயிற்சியாளர் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக  நடிக்க உள்ளார் கமல்.

கமலஹாசன் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றார். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள பாலமொன்றில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்தார். 

d_i_a

இந்த நிலையில், ' குழந்தை கையுறைகளுடன் என் புதிய ஸ்கிரிப்டை கையாளுகிறேன்..' என பதிவிட்டு கையுறைகளுடன் இருக்கும் புதிய புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் கமலஹாசன். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


மேலும், கமல் நடிப்பில் இறுதியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு ரிலீஸாகி தோல்வியை தழுவியது. ஆனாலும் இந்தியன் 3வது பாகமும் திரையரங்குகளில் வெளியாகும் என  ஷங்கர் தெரிவித்து உள்ளார்.

எனவே கமலஹாசன் கையில் அடுத்தடுத்து பல படங்கள் உள்ள நிலையில், இவற்றுள் எந்த படத்தில் உலகநாயகன் மாஸாக கம்பேக் கொடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement