• Dec 26 2024

தாய் நாட்டுக்குத் திரும்பிய கில்மிஷா, பிரமாண்டமாக வரவேற்ற யாழ் மக்கள்- வெளியாகிய போட்டோஸ்

stella / 11 months ago

Advertisement

Listen News!


ஷு தமிழ் தொலைக்காட்சியில்  சனி மற்றும் ஞாயிறு தினத்தில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்று டைட்டிலை வென்றார்.


தமிழ் நாட்டில் இருக்கும் கில்மிஷாவுக்கு பாடல் வாய்ப்புகள் குவிந்து வருவதால் நாடு திரும்ப முடியாமல் இருந்தார். இதனால் அண்மையில் சென்னையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு சென்று அங்கிருக்கும் தொப்புள் கொடி சொந்தங்களை சந்தித்தார். 


இதனை அடுத்து இன்றைய தினம் இவர் தன்னுடைய நாட்டுக்கு திரும்பியுள்ளார்.இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.மேலும் அவருடைய சொந்த ஊரான அரியாலையில் பிரமாண்டமாக  இசை நிகழ்ச்சி ஒன்றும் நடந்து வருகின்றது. இதில் அவர் பாடல்களைப் பாடி அசத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement