• Dec 27 2024

அரசியலில் ஜெயலலிதாவையே மிரள வைத்த கேப்டன் விஜயகாந்த்-இந்த துணிச்சல் யாருக்கு இல்லப்பா- உணர்ச்சிப்பூர்வமான வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இன்று காலை காலமானார். இவருடைய மறைவு தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நடிகர் விஜயகாந்தின் உடல் தற்போது கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அங்கே அவருடைய உடல் அடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் விஜயகாந்த் பலருக்கும் அள்ளிக்கொடுத்த கர்ணன் ஆவார். இதை திரையுலகில் உள்ள பலரும் கூறி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.அதே போல் இவரைபோல் சாப்பாடு போட்டு வயிறையும், மனசையும் யாராலும் நிரப்பவே முடியாது என்றும் கூறுவார்கள்.

இதனால் இவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்கள் மற்றும் மக்கள் ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இப்படியன நிலையில் நடிகர் விஜயகாந்த் ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த போது விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

எனவே பாராளுமன்றத்தில் ஜெயலலிதாவோடு நேருக்கு நேர் வாதிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதனைப் பார்த்த ரசிகர்கள். கேப்டன் அரசியலிலும் பட்டையைக் கிளப்பி இருக்கின்றாரே, அவரை முதல்வராக பார்க்க முடியாமல் போய் விட்டதே எனத் தமது கவலையைத் தெரிவிதது வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement