• Dec 26 2024

’கிழக்கு வாசல்’ தொடரில் திடீர் திருப்பம்.. ரேஷ்மாவை டம்மியாக்க களமிறங்கும் ப்ரீத்தி?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கிழக்கு வாசல்’ சீரியலில் வெங்கட் மற்றும் ரேஷ்மா முக்கிய வேடத்தில் நடித்து கொண்டிருந்த நிலையில் தற்போது ப்ரீத்தி என்ற நடிகையின் கேரக்டர் என்ட்ரி ஆகப்போவதாகவும் அவரது கேரக்டர் ரேஷ்மா கேரக்டரை டம்மி ஆக்கும் என்றும் கூறப்படுவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஒளிபரப்பாகி வரும் ’கிழக்கு வாசல்’ சீரியலில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் சுவாமியப்பன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் வெங்கட் மற்றும் ரேஷ்மா ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலின் கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ரேஷ்மா சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் இதுவரை அதிகமாக ஒளிபரப்பாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திடீரென இந்த சீரியலின் கதை வேறொரு டிராக்கில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த தொடரில் புதிதாக நடிகை ப்ரீத்தி குமார் எண்ட்ரி கொடுத்திருப்பதை அடுத்து இனி வெங்கட் மற்றும் ப்ரீத்தி குமார் ஆகியோர்களின் கேரக்டரை மையமாகக் கொண்டு தான் கதை செல்லும் என்று கூறப்படுகிறது. இதனால் ரேஷ்மா கேரக்டரை சீரியல் குழுவினர் டம்மியாக்கி உள்ள நிலையில் அவருடைய ரசிகர்கள் பலரும் ரேஷ்மா கேரக்டர் எங்கே அவர் தானே இந்த சீரியலின் கதாநாயகி? அவருடைய டிராக் எப்போது வரும்? என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த சீரியலின் குழுவினருக்கும் ரேஷ்மாவுக்கும் இடையே ஏதேனும் பிரச்சனையா? எதற்காக அவருடைய கேரக்டரை டம்மி ஆக்கினீர்கள்? என்ற கேள்விக்கு ’கிழக்கு வாசல்’ குழுவினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

Advertisement

Advertisement