• May 22 2026

சினிமா எனக்குத் தேவையில்லை... நடிகை மிருணாளினியின் திமிரான பேச்சால் அதிர்ந்த கோலிவுட்.!

shali / 6 days ago

Advertisement

Listen News!

மிருணாளினி ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது சினிமா பயணம் குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. 

டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமான அவர், அதுவே தனது வாழ்க்கையை முழுமையாக மாற்றியதாக கூறியுள்ளார். “விளையாட்டாக செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் தான் எனக்கு சினிமா வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் பட வாய்ப்புக்காக அதை செய்யவில்லை.” என்று அவர் தெரிவித்தார்.


மேலும் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலத்தில் பெரிய அளவிலான விமர்சனங்களை சந்திக்காமல் இருந்தது தனது அதிர்ஷ்டம் என்றும் கூறியுள்ளார். “யார் என்ன சொன்னாலும் நான் அதிகம் கவலைப்பட மாட்டேன்.” என்ற அவரது தன்னம்பிக்கை நிறைந்த பேச்சு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்து கேட்டபோது, “அதில் உண்மையான காதல் உணர்வு இருக்க வேண்டும். பார்ப்பவர்களுக்கு முகம் சுழிக்கும்படி இருக்கக் கூடாது” என்று மிகவும் நேர்மையாக பதிலளித்துள்ளார். 

அதோடு, “சினிமா இல்லையென்றால் எம்.எஸ். படித்துவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பேன்.” என்ற அவரது கருத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மிருணாளினி ரவியின் இந்த வெளிப்படையான பேட்டி ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement