• Dec 26 2024

விஜய் அரசியல் கட்சியில் சேருகிறாரா கேபிஒய் பாலா.. அவரே சொன்ன பதில்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி அதன் பிறகு விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் கேபிஒய் பாலா. இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தை சமூக சேவைக்காக பாலா செலவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக இதுவரை அவர் ஐந்து ஆம்புலன்ஸ்கள் இலவசமாக வாங்கி கொடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த கேபிஒய் பாலா ’விஜய் கட்சியில் சேர அழைப்பு வந்தால் அந்த கட்சியில் சேர்வீர்களா என்று கேட்டதற்கு தனக்கு அரசியல் தெரியாது என்றும் தன்னை விஜய் கூப்பிடும் அளவுக்கு தான் பெரிய ஆள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 



அரசியலுக்காக தான் இதை செய்யவில்லை என்றும் என்னை காப்பாற்றிய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த உதவியை செய்து வருகிறேன் என்றும் எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார். 

ஆனால் விஜய் தனது கட்சியில் சமூக ஆர்வமுள்ளவர்கள்,  மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்களை சேர்க்க திட்டமிட்டுள்ள நிலையில் அவர் தனிப்பட்ட முறையில் கேபிஒய் பாலாவுக்கு அழைப்பு விடுப்பார் என்றும் அந்த அழைப்பை ஏற்று பாலா அவரது கட்சியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement