• Dec 26 2024

KPY பாலாவின் பெயரை பச்சை குத்திய அதிசயப்பெண்!நெகிழ்ச்சி சம்பவம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பாலா.

வெட்டுக்கிளி என அழைக்கப்படும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்டர் கொடுத்து அசத்துவார். 

இந்நிகழ்ச்சிக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பெரிய ரீச் பெற்றார் என்று தான் சொல்ல வேண்டும்.


டிவி நிகழ்ச்சி மட்டுமில்லாது தனியார் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

இந்த நிலையில், KPY பாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை, புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.


அதில், KPY பாலா என்று அவருடைய ரசிகை ஒருவர் பச்சை குத்தியுள்ளார். அதனை காட்டி உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதன்படி குறித்த பதிவில், நான் சமீபத்தில் ஒரு அதிசயப் பெண்ணைப் பார்த்தேன். அவள் கையில் என் பெயரை பச்சை குத்திக் கொண்டுள்ளார். என் உணர்ச்சிகளை வார்த்தைகளால் விளக்க முடியாது... என்று ரொம்பவும் எமோஷனலாக பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement