• Apr 07 2026

க்ரித்தி ஷெட்டியா இது? அடையாளம் தெரியாத அளவிற்கு கிளாமரா போஸ் கொடுக்கிறாங்களே.!

shali / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகைகளில் முக்கியமானவராக க்ரித்தி ஷெட்டி திகழ்கிறார். குறுகிய காலத்திலேயே பல ஹிட் படங்களில் நடித்த அவர், இளைய தலைமுறையினரின் மனதை கவர்ந்த நடிகையாக உயர்ந்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக இருக்கும் அவர், விரைவில் ஹிந்தி திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், LIK படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் அவரது கேரியரில் இன்னொரு முக்கியமான படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் க்ரித்தி ஷெட்டி, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் அவர் செம ஹாட் உடையில் காட்சியளிப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த ஸ்டில்கள் இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன.


ரசிகர்கள் பலரும் அவரது அழகையும் ஸ்டைலையும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு அவர் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement