• Apr 16 2026

நான் ரோபோவா? 'தீமா' கேரக்டர் பற்றி பரவிய வதந்தி.. - கிருத்தி ஷெட்டி அதிரடி பேட்டி

shali / 1 day ago

Advertisement

Listen News!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘Love Insurance Kompany’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள நிலையில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 


இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, கௌரி ஜி. கிஷன், சீமான் மற்றும் ஷா ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களம் மற்றும் புதுமையான திரைக்கதை காரணமாக இப்படம் வெளியாகும் முன்பே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இந்த நிலையில், திரைப்பட விழாவில் பேசிய கிருத்தி ஷெட்டி கூறிய கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன. “எனக்கு தமிழ் மொழி மிகவும் பிடிக்கும். என் அம்மா கோயம்புத்தூரில் படித்தவர், ஆனால் எனக்கு தமிழை கற்றுக்கொடுக்கவில்லை. தற்போது இந்த அழகான மொழியை கற்றுக்கொண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், டிரெய்லரை பார்த்த பிறகு பலரும் தனது கதாபாத்திரம் ரோபோ போல உள்ளது என நினைத்ததாகவும், அதுவே படத்தின் வெற்றியாக கருதுவதாகவும் கூறினார். ‘தீமா’ என்ற தனது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அளிக்கும் பாராட்டுகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இப்படம் வசூலிலும் முன்னேறி வருவதால், எதிர்காலத்திலும் நல்ல வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement