• Dec 26 2024

குலதெய்வ கோயிலை மறக்காத குக் வித் கோமாளி பிரபலமான 'புகழ்' ! குழந்தைக்கு பூ முடி எடுத்து சாமி தரிசனம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது தனது குழந்தைக்கு பூ முடி எடுக்க விரும்பிய குக் வித் கோமாளி புகழ், தனது குடும்பத்தாருடன் தீவனூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ளார்.

அதன்படி இன்றைய தினம் காலை தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோயிலுக்கு தனது குடும்பத்துடன் வந்த புகழ், கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு, தனது பெண் குழந்தைக்கு பூ முடி எடுத்து சாமி தரிசனம் செய்தார்.இந்த கோயில், புகழின் குலதெய்வ கோயில் எனவும் கூறப்படுகிறது.


'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் புகழ்  புகழேந்தி. தனது திறமையால், பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று, இன்று திரைத்துறையில் தனக்கென முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். 

இவர், பென்ஸியா என்ற பெண்ணைக் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு  எளிமையான முறையில் தனது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.


தற்போது தனது குழந்தைக்கு பூ முடி (பிறந்த முடி எடுத்தல்) எடுக்க விரும்பிய புகழ், தனது குடும்பத்தாருடன் தீவனூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கே மீண்டும் வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement