• Dec 26 2024

குஷ்பூ, ராதிகாவை தங்க வைக்க இத்தனை செலவில் ஹோட்டல் வாடகையா? ஜப்பானில் தடபுடல் ஏற்பாடு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நெப்போலியனின் மூத்த மகனுக்கு நாளைய தினம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக திரை உலக பிரபலங்கள் ஜப்பானுக்கு படையெடுத்துள்ளார்கள். அவர்களுக்காக தடபுடலாக ஏற்பாடுகளையும் செய்துள்ளார் நெப்போலியன்.

நெப்போலியன் தனது மூத்த மகன் தனுஷுக்கு நெல்லை மாவட்டத்தில் இருந்த அக்ஷயா என்பவரை திருமண நிச்சயதார்த்தம் செய்தார். தனுஷால் விமானத்தில் பயணிக்க முடியாது என்ற காரணத்தினால் வீடியோ காலிலேயே இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இதைத் தொடர்ந்து ஜப்பானில் நடக்க உள்ள திருமணத்திற்காக அமெரிக்காவில் இருந்து தமது பயணத்தை கப்பலில் ஆரம்பித்தார்கள். தனுஷின் திருமணம் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர்களுடைய வாயடைக்க வைக்கும் வகையில் நெப்போலியன் மகன் உருக்கமாக ஒரு சில விஷயங்களை பேசி வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.

d_i_a

நெப்போலியன் மூத்த மகன் தனுஷின் திருமணத்திற்கு நடிகை குஷ்பூ, ராதிகா, மீனா, கலா மாஸ்டர், கார்த்தி, பாண்டியராஜன், சரத்குமார் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் பலர் ஜப்பானில் குழுமியுள்ளார்கள். மேலும் திருமணத்திற்கு வந்தவர்கள் தங்குவதற்காக ஜப்பானின் தலைநகரில் அறைகளையும் எடுத்து வைத்துள்ளார்.


இந்த நிலையில், குறித்த அறையில் ஒரு இரவுக்கான வாடகை இந்திய மதிப்பில் சுமார் 50,000 ரூபாய்க்கு மேல் என கூறப்படுகிறது. அப்படி அவர் கிட்டத்தட்ட 15  அறைகளுக்கு மேல் புக் செய்துள்ளாராம். இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் பிரீமியம் பிரிவில் புக் செய்யப்பட்ட குறித்த அறையில் மேக்கப் செய்வதற்கு ஒரு அறை, மாஸ்டர் பெட்ரூம், பால்கனி என பல வசதிகள் உள்ளது. ஷாப்பிங் செய்வதற்கும், மால் ரெஸ்டாரன்ட் என நல்ல லொக்கேஷனில் குறித்த ஹோட்டல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement