• Dec 26 2024

மீண்டும் மாஸ் காட்டும் லேடி சூப்பர்ஸ்டார்! நயன்தாராவின் அடுத்த படத்தின் அன்னோன்ஸ்மென்ட் வீடியோ இதோ!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர்களுக்கு இணையாக மாஸ் ஓப்பனிங் , பிமேல் லீடு கேரக்டர்களில் அசத்தலான நடிப்பு என தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாக உள்ள அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மனசினக்கரே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமாகிய இவர் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால்பதித்தார். தொடர்ந்து விஜய் , அஜித் , ரஜனி என்று பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறினார். சமீபத்தில் 1000 கோடி வசூல் செய்த ஜவான் திரைப்படத்திலும் நடித்து பிரபலமானார்.


ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் இவர் அடுத்ததாக Pauly Jr. Pictures தயாரிப்பில் டியர் ஸ்டுடென்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சந்தீப் குமார் இயக்கம் குறித்த திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நிவின் போலி நடிக்கின்றார். இவர்கள் இருவரும் ஏற்கனவே லவ் ஆக்சன் ட்ராமா என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் எனபதும் குறிப்பிடத்தக்கது.

 அன்னோன்ஸ்மென்ட் வீடியோ இதோ 


  

Advertisement

Advertisement