• Dec 26 2024

நடிகை லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? தமிழ் சினிமாவுக்கு 2 ஹீரோ தயார்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை லைலா தனது இரண்டு மகன்கள் உடன் கூடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கும் நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட் பதிவு வாங்கி வருகிறது.

தமிழ் திரை உலகில் கடந்த 90 ஆம் ஆண்டுகளில், 2000ஆம் ஆண்டு களில் முன்னணி நடிகையாக இருந்தவர் லைலா என்பதும் அவர் தமிழில் ’கள்ளழகர்’ என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக அறிமுகமாகி அதன் பின்னர் ’ரோஜாவனம்’ ’பார்த்தேன் ரசித்தேன்’ ’தீனா’ ’தில்’ ’நந்தா’ ’உன்னை நினைத்து’ ’மௌனம் பேசியதே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு அவர் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர் என்பதும்,  திருமணத்திற்கு பின்னர் அவர் திரை உலகில் இருந்து விலகிய நிலையில் 16 ஆண்டுகள் கழித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’சர்தார்’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார் என்பதும் அதன் பிறகு தற்போது ’கோட்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லைலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் சற்று முன் அவர் தனது இரண்டு மகன்கள் உடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்து அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவருடைய மகன்களை பார்த்த ரசிகர்கள் லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? கூடிய சீக்கிரம் தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோக்கள் கிடைத்து விடுவார்கள் என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement