• Apr 18 2026

பட்டையை கிளப்பும் லால் சலாம்! இரண்டாம் நாள் வசூல் விபரம் இதோ.

shali / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தான் ’லால் சலாம். இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய நடிகர்கள்  முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளார்கள். இந்த படம்  9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.


புரட்சிகரமான தலைப்பில் உருவான இப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். லால் சலாம் படத்தின் இரண்டு நாள் வசூல் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா, அதன்பின் வை ராஜா வை படத்தை இயக்கினார். 


இதன்பின் பல ஆண்டுகள் கழித்து இவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் லால் சலாம். விக்ராந்த் - விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க செந்தில், தம்பி ராமையா, ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட அனுபவமிக்க நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் லால் சலாம் திரைப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Advertisement

Advertisement