• May 27 2026

எதிர்பாராத நேரத்தில் ஓடிடிக்கு வரும் ‘லீடர்’.. எப்போது ரிலீஸ் தெரியுமா? முழு விபரம் இதோ

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தொழிலதிபராக இருந்து நடிகராக மாறிய லெஜண்ட் சரவணன், தனது முதல் படமான ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை பெற்றார். அந்த படத்தைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்திருக்கும் இரண்டாவது திரைப்படமான ‘லீடர்’, ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்த படம், ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, கருடன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், இந்த படத்திலும் விறுவிறுப்பான கதையை கையாண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் லெஜண்ட் சரவணனுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், ஷாம் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘லீடர்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ஆக்ஷன் மற்றும் ஸ்பை த்ரில்லர் அம்சங்களுக்காக பேசப்பட்டது. குறிப்பாக லெஜண்ட் சரவணனின் மாறுபட்ட நடிப்பு மற்றும் ஸ்டைலிஷ் தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், தற்போது இந்த படம் ஓடிடி ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. வரும் மே 29ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘லீடர்’ திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் படம் வெளியாக உள்ளதால், தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள், தற்போது வீட்டிலிருந்தபடியே இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement