• Apr 07 2026

“லீடர்” ஹிட் ஆகணும்.! தரையில் உருண்ட கூல் சுரேஷின் விசித்திர வேண்டுதல்.. இணையத்தில் வைரல்

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கருடன் படத்தின் மூலம் வெற்றி பெற்ற இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடித்துள்ள “லீடர்” திரைப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகத் தயாராகியுள்ளது.

பொதுவாக லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்படும் நிலையில், இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லீடர் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில், லெஜெண்ட் சரவணன், “இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும். ஜெய்லர், லியோ போன்ற படங்களைப் போல வெற்றி பெறும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், 'லீடர்' படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர் கூல் சுரேஷ், முருகன் கோவிலில் அங்கப் பிரவேசம் செய்துள்ளார். தற்போது அவர் கோவிலில் செய்த அந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காமெடி நடிகரான கூல் சுரேஷ், தனது தனித்துவமான பேச்சுத் திறனால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருபவர். குறிப்பாக, திரைப்படங்கள் வெளியாகும் போது அந்த படங்களுக்கு ஆதரவாக தனித்துவமான முறையில் பிரச்சாரம் செய்வது அவரது வழக்கமாகும்.

அதேபோல், லெஜெண்ட் சரவணனின் ரசிகரான அவர், லீடர் படம் வெற்றி பெற வேண்டும் என வேண்டி இந்த அங்கப் பிரவேசத்தை மேற்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement