23 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் ஏ. மசிது இயக்கத்தில் விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த 'தமிழன்' திரைப்படத்தின் மூலம் இசை உலகில் கால் பதித்தவர் இசையமைப்பாளர் டி இமான். அந்த இசையை உருவாக்கிய 23 ஆண்டுகளில் அவர் பல ஹிட் பாடல்களை அளித்து இசையுலகில் ஒரு தனி இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் தனது சமூக ஊடக பக்கத்தில் 23 ஆண்டுகால பயணத்தை சிரமங்கள் மகிழ்ச்சியுடன் கடந்ததாக பகிர்ந்துள்ளார். "இந்தப் பயணம் என் வாழ்க்கையை எவ்வளவு மாற்றும் என்று அப்போது தெரியவில்லை. இன்று நன்றியுடன் திரும்பிப் பார்க்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணத்தை எளிதாக எட்டவில்லை, ஆனால் அவரது வழிகாட்டிகள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவரை எப்போதும் உற்சாகம் அளித்து வருவது தான் அவரது மிகப்பெரிய பலமாக இருந்தது. "என் ரசிகர்கள், வழிகாட்டிகள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு.உங்கள் அன்புதான் எனது மிகப்பெரிய பலம். இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியதற்கு நன்றி," என அவர் தனது நன்றியை தெரிவித்து உள்ளார்.
Listen News!