• Sep 17 2026

இளையராஜா கொடுத்த சர்ப்ரைஸ்… ‘லெனின் பாண்டியன்’ படக்குழுவின் அதிரடி அறிவிப்பு!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நாயகனாக நடித்துள்ள ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் புதிய பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கங்கை அமரன், நடிகை ரோஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.


மணல் கொள்ளைக்கு எதிராக போராடும் காவலரை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. 

முன்னதாக ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அதன் வெளியீடு தள்ளிப்போனது.

இந்நிலையில், தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இதனிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், ‘பாண்டி முனி கேக்குது’ என்ற பாடலும் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இளையராஜாவே எழுதி, பாடி, இசையமைத்துள்ளார். இதனால், படத்தின் இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Advertisement

Advertisement