• Dec 26 2024

நான் ரெடி தான் வரவா? இளம் அழகிகளுடன் செம்ம ஆட்டம் போட்ட ஃபிட்னஸ் பயிற்சியாளர்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

உலகப் புகழ்பெற்ற ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஒருவர் தன்னுடைய மாணவிகளுடன்நான் ரெடி தான் வரவாஎன்ற பாடலுக்கு செம்ம நடனமாடி உள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உலக அளவில் புகழ்பெற்றவர் பிட்னஸ் பயிற்சியாளர் ஜூலியஸ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னிடம் ஒர்க் அவுட் செய்ய வந்த மாணவிகளுடன்லியோபடத்தில் இடம் பெற்றநான் ரெடி தான் வரவாஎன்ற பாடலுக்கு நடனமாடிக்கொண்டே ஒர்க்கவுட் சொல்லிக் கொடுத்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி ஒரு சில மணி நேரங்களில் செம்ம ஹிட் ஆகிய உள்ளது என்பதும் லைக்ஸ், கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே சில தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்களுக்கு ஒர்க்கவுட் செய்யும் வகையில் வீடியோவை பதிவு செய்திருந்தாலும் இந்த பாடலுக்கு செம வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவுக்கு  இளம் அழகிகளுடன் பிட்னஸ் பயிற்சியாளர் நன்றாக என்ஜாய் செய்கிறார் என்று கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

முன்னதாகலியோபடத்தில் இடம்பெற்ற விஜய் பாடியநான் ரெடி தான் வரவாஎன்ற பாடல் உலக அளவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பதும் இந்த பாடலுக்கு 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement