• Dec 26 2024

என் மகனையும் வாழ விடுங்கள்! விமர்சனங்கள் வேண்டாம்! மகன் திருமணம்-நெப்போலியன் வருத்தம்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் பல டாப் வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டு இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் அரசியலிலும் ஒரு ரவுண்டு வந்துள்ளார். 


இவரது மூத்த மகன் தனுஷிற்கு தசை சிதைவு நோய் இருப்பதால் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆனார். தற்போது அவருக்கு திருமணமும் நடத்தி வைக்க உள்ளார்.தனுஷின் திருமணம் ஜப்பானில் நடக்கவுள்ள நிலையில் தற்போது குடும்பத்துடன் ஜப்பான் சென்றுள்ளார் நெப்போலியன். 


அவருக்கு திருமணம் ஏன், அவரால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழியப்போகிறது என நிறைய விமர்சனங்கள் வந்தன. இந்த விமர்சனங்கள் குறித்து நெப்போலியன், உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள் என்று நீண்ட விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். 

Advertisement

Advertisement