• Dec 26 2024

அந்த பணத்தை ஷேர் செய்து கொள்வோம்... மாயா போட்ட பிளான்... வலையில் விழுந்த பூர்ணிமா...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 96  வது நாளை நெருங்கி  விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கின்றது.  பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் பூர்ணிமா ரவி. ஆராத்தி யூடியூப் சேனலை இயக்கியதால்  பிரபலமான இவர் மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றார் . இதன் மூலம் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்த இவர் முடிந்தளவு அவருடைய திறமையை காட்டி 95 நாட்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தார் . 


பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட பணப்பெட்டியை யார் எடுப்பார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, பிக் பாஸ் வீட்டில் 16 லட்சத்துடன் பூர்ணிமா வெளியேறினார் .  யாரும் எதிர்பார்க்காத விதமாக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது . துணிவான பெண் , போல்ட் ஆனவங்க என அவருடைய சக போட்டியாளர்களே புகழும் அளவுக்கு இருந்த இவங்க எடுத்த முடிவு எல்லாரோயும் ஆச்சரியப்படுத்தியது . 


இந்த வகையில் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிய வந்ததும் முதலாவது காணொளி பதிவு செய்துள்ளார் . அதில் அவர் கூறியதாவது , "ஹாய் நண்பர்கள் நான் உங்க பூர்ணிமா ரவி லைப் வந்து ரொம்ப சின்னது நோர்மலா இருக்கவே முடியாது . நான்   இப்ப வெளிய வந்ததுக்கு அப்புறம் என்னுடைய நண்பர்களோட டைம் ஸ்பென்ட் பண்ண போறன் " என்று கூறியுள்ளார். 


பணப்பெட்டி எடுத்திட்டு  வந்தது பூர்ணிமாவுக்கு  ஆறுதலா தான் இருக்கு . 16 லட்சம் எடுத்திட்டு வந்து இருக்காங்க அதில பாதி மாயாக்கு தான் கொடுப்பாங்க போல மாயா தான் பூர்ணிமாவை பணப்பெட்டியை எடுக்க சொல்லி இருக்காங்க , மாயா சொல்லி இருக்காங்க நான் 2ஆவது இடம் வருவதற்கு வாய்ப்பு இருக்கு அந்த பணத்தை ஷேர் பண்ணி கொள்ளலாம் . நீ இதை எடுத்திட்டு போ என்று சொல்லி இருக்காங்க . என பலவாறு ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement