• Dec 25 2024

திரிஷா விவகாரம் தொடர்பில் இன்று போலீசில் ஆஜராகவில்லை... மருத்துவ சிகிச்சையில் மன்சூர் அலிகான்... கால அவகாசம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதம்..

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் தொடர்பாக மன்சூர் அலிகான் இன்று ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஆஜராகவில்லை என்ற செய்தி தற்போது கிடைத்துள்ளது.


நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசிய வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து இரண்டு பிரிவுகளில் கீழ் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இன்று காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி இருந்த நிலையில் மன்சூர் அலிகான் இன்று தான் ஆஜராகவில்லை என ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் பொலிஸாருக்கு கடிதம் ஒன்றை  அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கால அவகாசம் கேட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. தனது குரல் வளம் பாதிக்கப்பட்டு இருப்பதால் 15 நாட்களாக தான் மருத்துவசிகிச்சை மேற்கொண்டு இருப்பதாகவும் நாளை ஆஜராகி இந்த விவகாரம் தொடர்பில் கதைக்கவுள்ளதாகவும், தனக்கு கால அவகாசம் வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடபட்டுள்ளது.    

Advertisement

Advertisement