• Dec 26 2024

கருடன் படத்தில் நடித்த குட்டி வில்லன் யாரு தெரியுமா? சூரியை பார்த்து ஆப் ஆகிட்டாராமே..!!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ஸ்வேதா, ரோஷினி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்த படம் தான் கருடன்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை  பெற்று வருகின்றது.

இந்த நிலையில், கருடன் படத்தில் ரோஷினி பிரியதர்ஷினியின்  சகோதரராக நடித்தவர் ஜெயப்பிரகாசின் மகன் துஷ்யந்த் என தற்போது தகவல்கள் வைரலாகி உள்ளன.

அதாவது சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் துஷ்யந்த் கூறுகையில், கருடன் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் இந்த படத்தில் சின்ன கேரக்டர் செய்றீங்களா என்று துரை செந்தில்குமார்  தரப்பிலிருந்து கேட்டார்கள். இதில் சூரி, சசிகுமார் இருப்பதாக சொன்ன உடனே முதல் முறையாக நெகட்டிவ் கேரக்டருக்கு ஓகே சொல்லிவிட்டேன். நான் நகரத்தில் வளர்ந்தவன் என்பதால் கிராமத்து வட்டார வழக்கு எனக்கு தெரியவில்லை ஆனாலும் கஷ்டப்பட்டு நடித்தேன்.


ஈசன் படத்தில் சமுத்திரக்கனி உடன் நடித்திருந்தேன். ஆனால் கருடன் படத்தில் அவருக்கும் எனக்கும் காட்சிகள் எதுவும் இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை பார்த்ததும் என்னடா இப்படி வளந்துட்ட என ஆச்சரியப்பட்டார். நான் அதற்கு 14 வருஷம் ஆச்சு சார் என்று சொல்ல, வித்தியாசமாக இருக்கா இன்னும் நிறைய பண்ணனும் என பாராட்டினார்.

கருடன் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்துவிட்டு ஆப் ஆகிவிட்டேன். இவ்வளவு நாள் இந்த மனுஷன் காமெடி பண்ணிட்டு இருந்தாரே என யோசித்தேன் நாடோடிகள் படத்தில் தான்  சசிகுமார் என்னை முதலில் பார்த்தார். அப்பா ஜெயபிரகாஷை  அழைத்து வர சொன்ன பிறகு தான் எனக்கு ஈசன் படத்தில் நடிக்க  வாய்ப்பு கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement