• Dec 26 2024

சூப்பர் ஸ்டாரை வைத்து லோகேஷ் போட்ட மாஸ்டர் பிளான்..! அஜித் நின்னு பிடிப்பாரா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் வேட்டையன். இந்த திரைப்படம் கலவையான  விமர்சனங்களை பெற்றபோதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கும் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் குற்றவாளிகளை துரத்தி பிடித்து சுடுவதும், அதற்குப் பிறகு ஒரு கட்டத்தில் அவர் மனம் மாறிய விதமும் இதில் எடுத்துக் காட்டப்பட்டது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் துஷாரா விஜயன், பகத் பாஸில், ரித்திகா சிங், அமிதாபச்சன் என முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதிலும் துஷாரா விஜயன் நடிப்பு இந்த படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த கதைக்கு அவருடைய கேரக்டர் மிகச்சிறந்த திருப்புமுனையாக இருந்தது.

d_i_a

இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதற்கான படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. லோகேஷ் இயக்கும் படம் என்பதால் நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களுக்குள் ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில், கூலி படத்தை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதாவது உழைப்பாளர் தினமான மே முதலாம் தேதி இந்த படத்தை ரிலீஸ் பண்ணுவதால் இதற்கு அடுத்து வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கின்றனர். மேலும் இந்த படத்திற்கான ஷூட்டிங் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் முழுமை அடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதே வேளை,  2025 ஆம் ஆண்டு மே முதலாம் தேதி அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாக உள்ளது. எனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படமும், அஜித் நடிப்பில்  குட் பேட் அக்லி படமும் மே 1ம் திகதி வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement