• Apr 12 2025

ஊருக்காக நடிகை அன்ஷிதா செய்த வேலையை பாருங்க..!

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

செல்லம்மா சீரியலின் மூலம் சீரியல் நடிகையாக இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்த நடிகை அன்ஷிதா பிக்போஸ் சீசன் 8 இல் கலந்து கொண்டு வெளியுலக விமர்சனங்களிற்கு முற்று புள்ளி வைத்தார். வீட்டிற்குள் விஷாலுடன் காதல் போன்ற கிசு கிசுக்களிற்கு பதில் கூறிய இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.


நிகழ்ச்சி முடிவடைந்ததும் பரவலாக பல நேர்காணல்களில் கலந்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய jodi are you ready நிகழ்ச்சியில் கலந்து நடனமாடி கலக்கினார். இருந்தும் எதிர்பாராத விதமாக அவரால் நிகழ்ச்சியின் இறுதிக்கு செல்ல முடியாமல் வெளியேறினார்.


இந்த நிலையில் தற்போது நடிகை தனது குடும்பத்துடன் சேர்ந்து அட்டங்கரை பள்ளிவாசலில் ஆடு வெட்டி பிரியாணி போட்டு ஊருக்கு விருந்து வைத்துள்ளார். இதன் போது எடுத்து கொண்ட வீடியோவினை அவர் "எல்லாவற்றிற்கும் அல்ஹம்துலில்லாஹ்; மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என கூறி பதிவிட்டுள்ளார்.குறித்த வீடியோ தற்போது பரவலாக ரசிகர்களால் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement