• May 24 2026

''ஒரு முறை அல்ல; பலமுறை வருவது தான் காதல்.'' தமன்னா கொடுத்த அட்வைஸ்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா பாட்டியா, தற்போது பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான்-இந்தியா அளவில் ரசிகர்களை கொண்ட அவர், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக ‘புருஷன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது பிஸியான படப்பிடிப்புகளுக்கிடையில் அளித்த பேட்டியில், காதல் குறித்து தமன்னா பகிர்ந்த கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. 

அதன்படி அவர் கூறுகையில்,  இன்றைய காலத்தில் காதல் மற்றும் உறவு பற்றிய புரிதலில் பலர் குழப்பமடைந்துள்ளனர். காதல் ஒரு வியாபாரமாக மாறும் அபாயம் உள்ளது.

ஒருவரை உண்மையாக நேசிக்க வேண்டுமெனில் அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். நம் எண்ணங்களை திணிப்பதன் மூலம் காதலை நிரூபிக்க முடியாது. காதல் என்பது ஒரே ஒரு அனுபவமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. அது வாழ்க்கையில் பலமுறை நிகழக்கூடிய உணர்வு.. என்று தெரிவித்துள்ளார்.


சமீப காலமாக தமன்னா தனது கேரியரில் புதிய வகை கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வருகிறார். குறிப்பாக வெப் சீரிஸ் மற்றும் பெண் மையப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

மேலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகள் மற்றும் காதல் உறவு வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பேசுபொருளாகி வருகின்றன.

தற்போது காதல் பற்றி அவர் தெரிவித்த இந்த கருத்தும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement