• Apr 18 2026

LOVE YOU விஜய் அண்ணா! லியோ 1 year! லோகேஷ் வெளியிட்ட வைரல் டுவிட்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளிவந்த வெற்றி திரைப்படம் லியோ.  மாஸ்டர் படத்திற்கு பிறகு இவர்கள் இணைந்ததால் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, படமும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. 


ரூ. 250 முதல் ரூ. 300 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில் விஜய்யை தாண்டி த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா என பல கலைஞர்கள் நடித்தார்கள். அவர்கள் அனைவருக்குமே மக்களிடம் பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. அனிருத் இசையமைப்பில் வெளிவந்த அனைத்து பாடல்களுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.


இந்நிலையில் தற்போது லியோ திரைப்படம் வெளியாகி 1 வருடமாகிவிட்டது. இதனை ஞாபகப்படுத்தும் முகமாக இயக்குனர் லோகேஷ் "கனகராஜ் தனது டுவிட் பக்கத்தில் எத்தனையோ கற்றல், பல நினைவுகள், பல உற்சாகமான தருணங்கள் இந்த படத்தின் மூலம் கிடைத்தது.

என் மனதிற்கு நெருக்கமாக இருக்கும் படம் லியோ ரொம்ப நன்றி விஜய் அண்ணா.   இந்த படத்திற்காக தங்கள் வியர்வை மற்றும் இரத்தத்தை செலவழித்த அனைத்து மக்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என்றென்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 


Advertisement

Advertisement