• Dec 26 2024

அஜித்தை அடுத்து மகிழ்திருமேனியும் பிரச்சனை.. கைவிடப்படுகிறதா ‘விடாமுயற்சி’?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெறாத நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு  தாமதத்திற்கு பொருளாதாரப் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகள் காரணம் என்று கூறப்பட்டது.

அதனால்தான் நான் அஜித் ’விடாமுயற்சி’ படத்தினை அம்போ என விட்டுவிட்டு ’குட் பேட் அக்லி’ படத்தின் படத்திற்கு சென்று விட்டார் என்றும் ஜூன் மாதம் அவர் ’விடாமுயற்சி’ படப்பிடிப்புக்கு வர சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு தயாரிப்பு நிறுவனம் தயாராக இல்லை என்றால் 'குட் பேட் அக்லி’ படத்தை முடித்துவிட்டு அடுத்த வருடம் தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பொருளாதார பிரச்சனைக்கு காரணம் மகிழ் திருமேனி தான் என்றும் அவர் திட்டமிட்டபடி படத்தை எடுக்கவில்லை என்றும் அதனால் இந்த படத்தின் பட்ஜெட் இப்போது இரு மடங்கு ஆகிவிட்டது என்றும் லைகா குற்றஞ்சாட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை மறுக்கும் மகிழ் திருமேனி, படப்பிடிப்பு தளத்தில் தட்பவெப்ப நிலை காரணமாகத்தான் படப்பிடிப்பு சில சமயம்  ரத்து செய்யப்பட்டதாகவும் இதை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தான் வேண்டும் என்றே படத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்திடம் மட்டுமின்றி மகிழ் திருமேனி விஷயத்திலும் லைகா  நிறுவனம் அதிருப்தி அடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை எப்போது தொடங்குவது என்று தெரியாமல் உள்ளது. இந்நிலையில் இந்த படம் கைவிடப்படவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement