சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் உட்பட பலர் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் வெளியானது. தற்போது இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் மாஸ் காட்டி வருகின்றது.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து மதகஜராஜா திரைப்படம் வெளியான போதிலும், தியேட்டர்களில் படத்தை பார்த்த ரசிகர்கள் இந்தப் படம் 12 ஆண்டுகள் கழித்து வெளியானது போலவே இல்லை என மதகஜராஜா படத்திற்கு தமது பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருகின்றார்கள்.
பொங்கல் ரேஸில் நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் வெளியாவதற்கு முன்பே மதகஜராஜா திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரீ மியர் ஷோவில் விஷாலின் கைகள் நடுங்கின. அதன் பின்பு அவருக்கு வைரஸ் காய்ச்சல் என்று கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து விஷால் பற்றி பல கருத்துக்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வந்த நிலையில், நான் வீழ்வேன் என்று நினைக்காதீர்கள் என விஷால் தன்னை தீவிர நோயாளியாக சித்தரித்த அத்தனை பேருக்கும் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், மதகஜராஜா திரைப்படம் முதல் நாளிலேயே அதிகபட்சமாக 3.2 கோடிகளை வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனியின் இசையும் பலம் சேர்த்ததாக காணப்படுகிறது.
இதேவேளை பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் திரைப்படம் முதல் நாளில் 95 லட்சமும் மூன்றாவது நாளின் முடிவில் மொத்தமாக 3.5 கோடி ரூபாய் வசூலையும் பெற்றுள்ளது. இதனால் வணங்கான் படத்தின் வசூலை மத கஜ ராஜா திரைப்படம் பின்னுக்கு தள்ளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!