• Jan 15 2025

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த மாகாபா! முத்துவை பற்றி போட்டுக்கொடுத்த சவுந்தர்யா!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் அநேகமான ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 8 சீசன் நடைபெற்று வருகிறது. தற்போது சுவாரஷ்யமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ்  சீசன் 8 இறுதி வாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய நாள் அடுத்த ப்ரோமோ ரிலீசாகி இருக்கிறது. 


பொங்கல் செலிப்ரேஷன் முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டுக்கு  வந்திருந்தனர். தற்போது விஜய் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மாகாபா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். மாகாபா போட்டியாளர்களிடம் பேசும் போது " உள்ள இருக்குறவங்க என் பெயரை போட்டு பயங்கரமா பேசிட்டு இருந்திங்க அதுனாலதான் நானே வந்துட்டேன் என்று கூறியுள்ளார்.


மேலும் "மாகாபா வித் கண்டஸ்டன்ஸ்" ஷோ நடைபெறுகிறது. அதில் மாகாபா போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கிறார். பவித்ராவிடம் "கேப்டன்ஷில் ஜெயித்த அப்புறம் ஏன் அதை முடிச்சி விட்டிங்க என்று கேட்கிறார். அதற்கு பவித்ரா " எனக்கு ஒரு வருத்தம் இருந்தது விட்டுக்கொடுத்துட்டேன் என்று சொன்னது முத்து அந்த வார்த்தை சொல்லாமல் இருந்து இருக்கலாம்" என்று சொல்கிறார்.  


அடுத்ததாக சவுந்தர்யாவிடம் வீட்டில் யார் சேப் கேம் விளையாடுறா என்று கேட்கிறார் மாகாபா. அதற்கு சவுந்தர்யா " முத்து சேபா இருப்பாரு ஆனா அங்க அங்க மாட்டிப்பாரு என்று சொல்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. இதில் போட்டியாளர்கள் மாகாபா கேள்விக்கு எவ்வாறு பதிலளித்து உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement