• Dec 29 2024

கொளுத்துடா வெடிய.. மூன்று நாட்களில் 30 கோடியை தாண்டிய மகாராஜா! அதிகார்வபூர்வ தகவல் இதோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படங்களாக அரண்மனை 2, கருடன் படங்களை தொடர்ந்து தற்போது மகாராஜா திரைப்படமும் காணப்படுகின்றது.

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக காணப்படும் மகாராஜா திரைப்படம், உலகளவில் சுமார் 2000 திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் வெளியான முதல் நாளிலேயே பத்து கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருந்தது.


மகாராஜா படத்தை பார்த்து விட்டு தியேட்டர்களில் இருந்து வெளியில் வந்த ரசிகர்கள் கூட இதற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளிக் கொடுத்திருந்தார்கள். அதுபோல பிரபல சினிமா விமர்சகர்களான பயில்வான் ரங்கநாதன், ப்ளூ சட்டை மாறன், அந்தணன் போன்றோரும்  இதற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்திருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது மகாராஜா திரைப்படம் மூன்று நாட்களில் 32.6 கோடி ரூபா வரை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Advertisement

Advertisement