• Jun 20 2026

வசூல் வேட்டையிலும் மகாராஜாவான விஜய் சேதுபதி..! மூன்று நாட்களில் குவிந்த கோடிகள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் தான் மகாராஜா. இந்த படம் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகின்றது.

இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் அனுராக் காய்ஷப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

மகாராஜா படம் வெளியான முதல் நாளையே பத்து கோடி வரை வசூலித்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.


விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் பெருமளவில் வரவேற்பு பெறாத நிலையில், வில்லன் கேரக்டருக்கு மட்டும் பட்டைய கிளப்பி வந்தன. ஆனால் தற்போது மகாராஜா படத்தில் ஹீரோவாக நடித்து மீண்டும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் மகாராஜா திரைப்படம் 25 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இனிவரும் நாட்களில் இந்த படம் எந்த அளவிற்கு வசூல் செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement