• Dec 26 2024

"தங்கலான்" போஸ்ட்டர்... வைரலாகும் டுவிட் பதிவு... மாளவிகா மோகனின் வேண்டுகோள்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

உலகளவில் நாளையத்தினம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' திரைப்படம். நடிகர் சியான் விக்ரம், மாளவிகா மோகன் உட்பட பல நச்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். நாளை திரைப்படம் ரிலீசாகவுள்ள நிலையில் மாளவிகா மோகன் டுவிட்டர் பக்கத்தில் இவாறு ரசிகர்கள் இடத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். 


நமக்கெல்லாம் ஏற்கனவே அறிமுகமாயிருக்கும் நடிகை மாளவிகா மோகன் 'தங்கலான்' படத்திற்காக முழு ஒத்துழைப்புடன் அர்ப்பணிப்பு மிக்க ஓர் உழைப்பை கொடுத்துள்ளார் என்பதை படக்குழுவின் சமீபத்தைய நேர்காணல்கள் மூலமாக அறியக்கூடியாய் உள்ளது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த 'தங்கலான்' படத்தின் மாதிரி போஸ்டரினை தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கும் மாளவிகா மோகனன் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். 


அதேபோல தற்போது பரவலாக ஷேர் செய்யப்படும் இப் புகைப்படம் தற்போதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படியான போஸ்ட்களை ஷேர் செய்யும் போது என்னையும் டேக் செய்யுங்கள் என்று எனக்கு அது பிடிக்கும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.    


Advertisement

Advertisement