• Apr 16 2026

ஜிவி பிரகாஷை அடுத்து விஷ்ணு விஷால், அதர்வா, தனுஷ்.. கோலிவுட்டில் ‘பிரேமலு’ நாயகிக்கு குவியும் வாய்ப்புகள்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

பிரேமலு என்ற படத்தில் நடித்த நாயகி மமிதா பாஜு தமிழில் ஜி.வி. பிரகாஷ் உடன் ‘ரிபெல்’  என்ற படத்தில் நடித்தார் என்பதும் அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 மலையாளத்தில் வெளியான பிரேமலு என்ற திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது என்பதும் அதேபோல் தெலுங்கிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்  ஜிவி பிரகாஷ் நடித்த ‘ரிபெல்’  என்ற திரைப்படத்தில் மமிதா பாஜு நடித்திருந்த நிலையில் அந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் ’ராட்சசன்’ ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் மமிதா பாஜு நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு இணையாக ஒரு கேரக்டர் அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக  அதர்வா அடிக்க இருக்கும் படத்தில் மமிதா பாஜு நடிக்க இருப்பதாகவும் அது மட்டும் இன்றி  தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திலும் மமிதா பாஜு நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  

மொத்தத்தில் மமிதா பாஜு  தமிழ் திரை உலகில் இன்னும் சில ஆண்டுகளுக்கு முன்னணி நடிகையாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement