விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு ஆரம்ப நாள்களில் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இளைஞர்களை கவரும் காதல் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கவனம் பெற்றன.
ஆனால், நாளடைவில் படத்திற்கான விமர்சனங்கள் மாறத் தொடங்கின. சமூக ஊடகங்களில் நெகட்டிவ் ரிவியூக்கள் அதிகரித்ததால், வசூலிலும் தாக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கியிருந்ததால், இந்த படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால் இந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் நேற்றைய தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த படம் வெளியான போது ஆரம்பத்தில் அமோக வரவேற்பும் பாராட்டுகளும் இருந்தது. ஆனால் நாளடைவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கின. இதனால் நான் உடைந்து போனேன், அதற்காக அழுதேன். இதற்குப் பின்னால் ஆயிரம் தொழிலாளர்களின் முயற்சிகள் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
எனினும், சில பகுதிகளில் மீண்டும் பார்வையாளர்கள் வருகை அதிகரித்து வருவது படத்திற்கு சிறிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. மீண்டும் திரையரங்குகளில் கூட்டம் கூடி வருகின்றது. “உங்களுடைய ஆதரவுக்கு நன்றி” என உருக்கமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஆறாவது நாளுக்கான வசூல் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் நேற்றைய தினம் ஒரு கோடி 95 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இதுவரை இந்த படம் இந்தியாவில் 36 கோடி, வெளிநாடுகளில் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இந்த படம் 50 கோடி ரூபாயை நெருங்குவதால் படக்குழுவினர் சற்று நிம்மதி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வசூல் பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட்டுக்கு மிகவும் குறைவு என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!