• Apr 16 2026

திவாகர் ரொம்ப வெகுளியான ஆள்; அவர் நடிக்கல.! அரோரா என்ன சொல்லி இருக்காங்கன்னு பாருங்க

Aathira / 9 hours ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி பிரபலங்களான மாகாபா ஆனந்த், கானா வினோத் மற்றும் புகழ் ஆகியோர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக திவாகர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பின் திவாகர் மீது தான் தவறு என மாகாபா ஆனந்த் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு இவர்களின் இந்த விவகாரம் தொடர்பில் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஏற்கனவே திவாகர் பலருடன் தற்பெருமையாக பேசி வம்பு இழுத்த காட்சிகள் மீண்டும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

அத்துடன் குக் வித் கோமாளி செட்டில் இருக்கும் போது, போட்டியாளரின் மனைவியிடம் திவாகர் தவறாக நடந்து கொண்டார் எனவும் மாகாபா ஆனந்த் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதனால் பலரும் திவாகருக்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலங்களான அரோரா, சுபிக்ஷா ஆகியோரிடம் திவாகர் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்போது அவர்கள் கொடுத்த பதிலடி தற்போது வைரலாகி வருகிறது.

அதன்படி, பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது திவாகர் ரொம்ப வெகுளியான ஆள். அவர் நடிக்கவில்லை, அவருடைய நேச்சரே அப்படித்தான், ஆனால் தெளிவானவர் என அரோரா தெரிவித்துள்ளார். 

மேலும், “இந்த விவகாரம் நடந்த போது நான் அந்த இடத்தில் இல்லை, அதனால் அதைப் பற்றி ஒன்றும் பேச முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement